dimanche 16 août 2009

புதையல் நீ



















ஏதோ சொல்ல நினைத்து தோற்றுப்போய்
உதடுகளில் மறைத்து வைத்திருந்தும்
முடியாமல்...
கோழை ஆகி...
எனக்குள்ளே தவித்த நாட்களை
இன்று நினைக்க...
என்னையே நொந்து சிரிக்கிறேன்!
உண்மையான அர்த்தம் தெரியாமல்
உனக்காய் காத்திருந்து
வெறுமையாய் கழித்த தருணங்களை...
இன்று தேடி அலைகிறேன்
நான் இப்படி என்பதால் நீயும் அப்படியே என்று
கனவில் மட்டுமே வாழ்ந்திருந்தேன்!
ஆனாலும்...
அப்படி இருந்ததினாலோ என்னவோ
என் மீது பல மாற்றங்கள்
ஒரு வார்த்தை கூட பேசவில்லை
தேவையென எதையும் கேட்டதில்லை
இருந்தும்...
எனக்கேயான பாதையை நீ காட்டினாய்
சோகங்கள் வந்த போது
விலக கற்றுத் தந்தாய்
சுகங்கள் வந்த போது
ரசிக்கச் செய்தாய்
உன் நினைவில் வாழ்ந்த
"அந்த வருடங்கள்"
எவருக்கும் தெரியாவிட்டாலும்
எனக்குள் தந்த வருடலை...
இதுவரை சொல்ல நினைத்தும்
முடியவில்லை!
வெளியில் சொல்ல நினைத்தாலும்
வார்தைகள் ஏனோ சரியாய் இல்லை...
போகட்டும்!
நீ இருக்கும் போதே...
எவரிடமும் சொல்ல நினைத்தில்லை
இப்பொழுது மட்டும்!... ஏன்?
என்னுள்ளே மூழ்கிப் போன நினைவாய் நீ!
வெளியில் சொல்லும் போது...
எதையோ இழக்கிறாயே! ஏன்?
அதனால்...
எப்பொழுதும் புதைந்தே இரு!
ஒரு புதையலைப் போல.

-தயா

பாசப் பறவைகள்























பாசப் பறவைகள் இரண்டு
பறந்து வந்ததம்மா!
பணிந்து நானும் ஏற்றுக்கொண்டு
பாசமோடு நின்றேனம்மா!

போதும் போதும் என்று சொல்லி
புனித வாழ்வு வாழ்ந்ததம்மா!
புன்னகை பூத்த வதனங்கள் இரண்டும்
பூப்பூவாய் பொலிந்ததம்மா!

நல் மனதின் கொள்கை கண்டு
நானும் வியந்து நின்றேனம்மா!
நலிந்திடாது ஒன்றை ஒன்று
ஆதரித்து நின்றதம்மா!

கூடும் வாழ்க்கை தன்னிலே
குணங்கெடாது வாழ்ந்திருந்து
கொள்கை கொண்டு கோலாகலமாய்
கூடிய மட்டும் வாழ்ந்தனவே!
-சுஜா

mardi 7 juillet 2009

தாயின் சிறப்பு
























அம்மா
எந்தன் அம்மா
ருமையான அம்மா
இன்பமுற வைத்து
இனிய கதைகள் சொல்வாள்.
ஈன்ற பொழுதில் முகம் மலர்ந்து
ஈகை செய்து வள‌ர்த்தாள்.
உயரிய ஒழுக்கங்களைப் புகட்டி
உரிமையுடன் நேசித்தாள்.
ஊஞ்சலாட விட்டு
ஊக்கமுடன் கவனித்தாள்.
எண்ணும், எழுத்தும் கற்பித்து
எப்பொழுதும் விழித்திருந்தாள்.
ஏற்றம், தாழ்வு பாராது ‍-நல்
எண்ணப்படி வள‌ர்த்தாள்.
ஐம்புலன்கள் உதவியுடன்
ஐங்கரனை வணங்க வைத்தாள்.
ஒற்றுமையாக வாழ்வதற்கு
ஒருங்கிருந்து கற்பித்தாள்.
ஓம் எனும் பிரண‌வத்தை
ஓதி ஓதிப் புகட்டினாள்.
ஒளதடங்களை ஊட்டி
அன்பாக வள‌ர்த்தாள்.

-சுஜா

samedi 4 juillet 2009

MY STORY






















பயணங்கள் தொடர்கிறதோ? - உந்தன்
பாதைகள் நீள்கிறதோ?
உன் பழைய வாழ்வு... அதில் நீ
விட்டுச் செல்... ஓர் புதிய சுவடு!!!
பதிந்து இருக்குமே அது…
அப்போதும், இப்பொதும், எப்போதும்...

84 நான் பிறந்தேன் யாழ்ப்பாணத்தில்

கொடிய யுத்தம் நடந்தது தாய் நாட்டில்
இடம் பெயர்ந்து வந்தேன் ரோட்டில்(Road)
பின் கிளாலி கடந்தேன் போட்டில்(Boat)
வந்து வன்னியில் போட்டேன் கொட்டில்.

அங்கு பிடித்தது மலேரியா!
நாட்கள் கடந்தது பட்டினியா!
மீண்டும் யுத்தம் இது சரியா?
தமிழனுக்கென்ன இது விதியா?
நான் சொல்வதென்ன உனக்கு ஜோக்கா?(Joke)
அப்டீன்னு நினைத்தால் நீ மக்கா!

பயணங்கள் தொடர்கிறதோ? - உந்தன்
பாதைகள் நீள்கிறதோ?
உன் பழைய வாழ்வு... அதில் நீ
விட்டுச் செல்... ஓர் புதிய சுவடு!!!
பதிந்து இருக்குமே அது…
அப்போதும், இப்பொதும், எப்போதும்...

மீண்டும் Jaffna பயணம்
அங்கு மக்கள் பலரும் மரணம்
ஆமி (Army) பண்ணுவதெல்லாம் அதர்மம்
அவனை அடித்தொழிப்பதே தர்மம்
பள்ளி செல்வதோ சிரமம்
பார்க்குமிடம் எங்கும் ரத்தம்
இதைக் காணும்போது ஏனோ சீற்றம்
கொதித்தெழுந்தால் என்ன குற்றம்?
இப்படி இருந்தது என் பிழைப்பு !
அப்போ வந்தது ஒர் அழைப்பு,
"வெளிநாடு (பிரான்ஸ்) வா!" என்றதும் திகைப்பு!!!

நான் போனேன் கட்டுநாயக்கா ஏர்போர்ட்! (Air port)
அங்கு இருந்தவன் கேட்டான் என் பாஸ்போர்ட் ! (Passeport)
பின்னர் எங்கே போவதாக உத்தேசம்?
நானோ சொன்னேன் வெளிநாடு தேசம்!
ஏன், நம்ம நாட்டில் என்ன பஞ்சம்?
புரிந்ததெனக்கு, அவன் கேட்பதோ லஞ்சம்!!

ஏறும்போது சொன்னாங்க வெல்கம்! (Welcome)
நானோ தமிழில் கூறினேன் வணக்கம்!
என்றாலும் என் மனதில் ஓர் ஏக்கம்!
அது என் தாய் நாடு தந்த தாக்கம்!

பயணங்கள் தொடர்கிறதோ? - உந்தன்
பாதைகள் நீள்கிறதோ?
உன் பழைய வாழ்வு... அதில் நீ
விட்டுச் செல்... ஓர் புதிய சுவடு!!!
பதிந்து இருக்குமே அது…
அப்போதும், இப்பொதும், எப்போதும்...

ப்லைட் (Flight) வந்து இற்ங்கியது ஆபிரிக்கா!
அப்போ கேட்டேன் " இதுதான் யுரோப்பா ?"
வந்தவன் சொன்னான் " ஆமா, பக்கதில தான்பா!"
உண்மையில் இவன் ஓர் ஏஜென்சி (Agency) தாண்டா!!

ஆபிரிக்காவில் இருந்தேன் ரெண்டு மாசம்,
ஆனால், அது ஓர் வன வாசம்!
ஒரு நாள் சொன்னாங்க "வெளிக்கிடு கானா( Gana)!"
நானோ சொன்னேன் "சரீங்கண்ணா!"
பாஸ்போர்ட் (Passeport) தந்தாங்க "நூல் நூலா" !
இதில போறதுக்கு எனக்கு லூசா! லூசா!
"உனக்கென்ன, நாம் கொடுபோம் கை நிறய பைசா!"
எனக் கூறி ஏற்றிவிட்டான் ப்லைடில் ( Flight) " நைசா "
காசா லேசா காசாலே சா!!! காசா லேசா காசாலே சா!!!

வந்து நான் இறங்கினேன் பாரிஸில்,( Paris)
உடம்பெல்லாம் நடுங்கியது குளிரில்.
இப்படிதாண்டா இங்க வெளிநாட்டில்,
இருக்குமென்று கூறினார் மாமா வீட்டில்.
இது தான் என்னோட ஸ்ரோறி (Story)
உன்னோட லைபும் இதுமாதிரி
இருந்திச்சின்னா, ஐயாம் வெரி சாரி...(I am very Sorry)

பயணங்கள் தொடர்கிறதோ? - உந்தன்
பாதைகள் நீள்கிறதோ?
உன் பழைய வாழ்வு... அதில் நீ
விட்டுச் செல்... ஓர் புதிய சுவடு!!!
பதிந்து இருக்குமே அது…
அப்போதும், இப்பொதும், எப்போதும்...

எழுதியது கேதாரன் ( 2006இல்)

dimanche 28 juin 2009

Have You Ever .... ???

Have you ever been loved ?

Have you ever followed the moon being in your car ?

Have you ever admired someone without knowing the person ?

Have you ever lied a lot to tell a truth ?

Have you ever said "poda" to your "dada" ?

Have you ever seen someone dancing secretly ?

Have you ever been suprised by someone ?

Have you ever missed your station while listening to your favorite music ?

Have you ever admired the one you love while he/she was sleeping ?

Have you ever cried looking in a mirror ?

Have You ever loved someone at the age of 12 ?

Have you ever made smile someone who was crying ?

-Thaya

மழை

வானம் மழையாக பொழிந்தது
ஏனென்றால் அதற்கும் காதல் தோல்வியாம்!

-‍கேதாரன்

எனெர்ஜி [energy]





நீ சார்ஜர் (charger)
நான் :பட்ரி (battery)
எப்போதெல்லாம் பலவீனம் ஆகிறேனோ,
அப்போதெல்லாம் நீ என் பக்கத்தில் வேண்டும்!

-தயா


பி.கு. (or P.S.) : நான் ஒரு ரிச்சார்ஜ:பிள் :பட்ரி( rechargeable battery) =)

samedi 27 juin 2009

ரயில் பயணம்














விடிந்தும் விடியாமல் இருக்கும் காலைப் பொழுது பார்க்க அழகு
லேசாகப் படிந்திருக்கும் பனிக்கூட்டம் கூடுதல் அழகு
வேலைக்குப்போகிறவரும் பள்ளி செல்பவரும் ரயிலுக்காகக் காத்திருப்பது அழகு
எல்லோர் தூக்கத்தையும் கெடுத்துக்கொண்டு தான் பெரிய ஹீரோவாக வரும் ரயில் அழகு
A.R றஹ்மானுக்கு போட்டியாக மியூசிக் போடும் அவனின் இயந்திரச் சத்தம் அழகு
அவனுடன் போட்டி போட்டுக்கொண்டே ஓடும் இயற்கைக் காட்சிகள் ரொம்ப அழகு
கறுப்பு நிறத்தவன் வால்க்மன் கேட்டுக்கொண்டே தலையை ஆட்டுவது அழகு
போலிஸ் வர இருக்கயில் போட்ட காலை தூக்கும் அவனின் மரியாதையும் அழகு
செய்தி தாள் படிக்கும் வெள்ளை மூதாட்டியின் கண்ணாடி அழகு
காதல் ஜோடியின் அரவணைப்பு வார்த்தைகள் கேட்க அழகு
எங்கோ ஓர் தூரந்தில் பறக்கும் பறவையின் சிறகு அழகு
யன்னல் ஓரம் சாய்ந்துகொண்டே தூங்கும் மாணவியின் கூந்தல் தூக்கல்அழகு
மழலைக் குட்டி ஒன்றுக்கு அவள் தாய் தரும் பாசமுத்தம் மாசில்லா அழகு
நீயும் நானும் ரயிலில் பயணிக்கும் அதிஸ்டம் கிடைத்தால் கொள்ளை அழகு!

-கேதாரன்

vendredi 26 juin 2009

கிறுக்கல்


என் நாட்குறிப்பில்
நீ விட்டுச் சென்ற நினைவுகளை
எழுதித் தொலைக்காமல்
வரைந்து வைத்திருக்கின்றேன்!
எனக்கு மட்டுமே புரியும்
கிறுக்கல் ஓவியமாய்...

-தயா

மானுடனின் செயற்பாடுகள்





ஆக்கமும், ஊக்கமும்
அகமகிழ் வெய்தும்.
நினைவும், நோக்கமும்
மனதினின்றகலாது.

பாட்டும், பொருளும்
பண்பை ஊட்டும்.
பரிவும், பாசமும்
பலன்களை அளிக்கும்.

தாக்கமும், துயரமும்
தனித்திருக்காது.
சோதனையும், வேதனையும்
சொற்கேளாது.

நோயும், நொடியும்
நொறுங்க வைக்கும்.
நோன்பும், நோற்பும்
நோதலின்றிருக்கும்.

சிந்தனையும், செயலும்
சிறகட்டித்துப் பறக்கும்.
அறிவும், ஆற்றலும்
அதியச மனிதனை உருவாக்கும்.

பேச்சும், பேறும்
பெரும் படைப்புக்களாக்கும்.
மூச்சும் முயற்சியும்
முகம் கொடுத்து வாழவைக்கும்.
-சுஜா

பேசுதலின் தாற்பரியம்






























அன்புடன் பேசி
ஆண்டவனை நினை.
இன்பமுடன் பேசி
ஈரமாக வாழ்.
உரிமையுடன் பேசி
உத்தமனாயிரு.
எழிமையுடன் பேசி
ஏறு போல் நட.
ஐயந்திபறப் பேசி
அமைதியாயிரு.
ஒற்றுமையாகப் பேசி
ஒருமித்திரு.
ஒளவை பாடல்கள் பேசி
ஆக்கமாயிரு.
நலமுடன் பேசி
நட்பாயிரு.
குணமுடன் பேசி
குன்று போல் வீற்றிரு.
தைரியமுடன் பேசி
தனிமையை அகற்று.
தத்துவமாகப் பேசி
தரணி போற்ற வாழ்.
மெளனமுடன் பேசி
மகோன்தைமாயிரு.
நல்வார்த்தை பேசி
நன்மை பெறு.
-சுஜா

lundi 22 juin 2009

சுட்டிப்பெண்ணே - ஜெயா & தயா

எங்கள் வீட்டு "சுட்டி" ஒருத்திக்காய் எழுதியது இந்த (உல்ட்டா) பாடல்!
























சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே

நீ தத்தித் தத்தி ஓடும்போது
சொக்க வைக்கிற...

சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே
நீ தத்தித் தத்தி ஓடும்போது
சொக்க வைக்கிற...

உம்மா தருவாயா உம்மா தருவாயா
என் கன்னம் மீது நீயும் உம்மா தருவாயா

உம்மா தருவாயா உம்மா தருவாயா
என் கன்னம் மீது நீயும் உம்மா தருவாயா

காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்கூடத்தான்
இருக்க விரும்பிறேன்

கண்கள் மூடி நீ தூங்கும் போதும்
என் விழிகள் ஏனோ உன்னை விட்டு நீங்க மறுக்குதே
-உன்னை ரசிக்கச் சொல்லுதே

சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே
நீ தத்தித் தத்தி ஓடும்போது
சொக்க வைக்கிற...
சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே
நீ தத்தித் தத்தி ஓடும்போது
சொக்க வைக்கிற...


happy birthday பாடுறோம்
ஹரனிய வாழ்த்துறோம்

உன்னை நாமே உன்னை நாமே
வாழ்த்தி வாழ்த்தி பாடுறோம்
வாழ்த்தி வாழ்த்தி பாடுறோம்

உனக்கோர் பரிசை கொடுக்க நினைத்து
இப்பாட்டை நாம் பாடுறோம்
-ரொம்ப ஆசையாய்
உனக்கோர் பரிசை கொடுக்க நினைத்து
இப்பாட்டை நாம் பாடுறோம்
-ரொம்ப ஆசையாய்

வாலி போல பாட்டெழுத எமக்குத் தெரியலையே
உன்னைப் பத்திப் பாடாம தான் இருக்க முடியலையே

உன்னை நாம் திட்டத் திட்ட பார்த்தோம்...
மனசு இறங்கவில்ல
-எமக்கு
உன்னைத்திட்ட மனசே இல்ல


சுட்டிப்பெண்ணே... சுட்டிப்பெண்ணே...
தத்தி தத்தி.....சொக்க...வைக்கிற!

சுட்டி சுட்டிப்பெண்ணே... சுட்டிப்பெண்ணே...
சுட்டி சுட்டி பெண்ணே...
தத்தி தத்தி ஓடும்போது
சொக்க... சொக்க...சொக்க வைக்கிற

உம்மா தருவாயா உம்மா தருவாயா
என் கன்னம் மீது நீயும் உம்மா தருவாயா

உம்மா தருவாயா உம்மா தருவாயா
என் கன்னம் மீது நீயும் உம்மா தருவாயா

காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்கூடத்தான்
இருக்க விரும்பிறேன்

கண்கள் மூடி நீ தூங்கும் போதும்
என் விழிகள் ஏனோ உன்னை விட்டு நீங்க மறுக்குதே
-உன்னை ரசிக்கச் சொல்லுதே

சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே
நீ தத்தித் தத்தி ஓடும்போது
சொக்க வைக்கிற...


சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே சுட்டிப்பெண்ணே
நீ தத்தித் தத்தி ஓடும்போது
சொக்க வைக்கிற...

சித்திரம் (01)-தயா
































































































samedi 20 juin 2009

கண்கள் (2008)

கவிதை(யா?)

யன்னலோரம்

Be different ! Be Urself !

விழிகள் அழுவதற்கா ? சிறுகதை

பாகம் 1























பாகம் 2























எழுதியவர் : கேதாரன்

சித்திரம் (01) - சுஜா

சுஜாவின் சில வரைபடங்கள் இதோ :










































































உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. :)

நட்பின் காதல்-குறும்படம்


ஃப்ரான்ஸில் இயக்கப்பட்ட இக்குறும்படத்தைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

கதை & இயக்கம் : சதீஸ்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு : கேதாரன் (yaal media)

தயாரிப்பு : விழிகள்

lundi 15 juin 2009

நீ இன்று வாழ்ந்து காட்டடி!




பெண்ணே உனக்கு எத்தனைதான் கொடுமைகள் ?

எப்போது தீரும் உன்னை வாட்டும் தனிமைகள்?

பிறந்தவுடன் ஆரம்பிக்கும் துயர் இறக்குமட்டும் தொடர்வதா?

பெண்களுக்கு எத்தனை தான் கொடுமைகள் சொல்வதா?

பாசத்தில், காதலில், வீட்டில், வீதியில், உடலில், உளவியலில்

மண வாழ்க்கையில் ஏன் பிணமாகயில் கூடத் துயரில்...


எனவே, ஒரு நிறைவேறாத காதலால் துவண்டு விடாதே!

உனக்குக் கிடைக்காத பாசத்தால் தளர்ந்து விடாதே!

உன்னை நேசிப்பவரை அதிகமாக நீ நேசிக்கத் தவறாதே!

உனக்கு இசையே துணையென நீ குறிப்பிட்டபோதே- நான்

உணர்ந்து கொண்டேன் உனது துயரங்களின் பாரத்தினை!


துன்பங்கள் தான் நீ முன்னெடுத்திருந்த வாழ்வாக இருந்திருக்கின்றன!

நள்ளிரவில் கூட உன் கண்கள் உன் பேச்சைக் கேட்க்க மறுக்கின்றன!

உன் வாழ்வின் பல மணித்துளிகள் வெறுமையான சிந்தனையில் கழிகின்றன!

அதற்க்காக உன் கவலைகளை இருட்டு அறைக்குள் இருந்தவாறே பூட்டிக்கொள்ளாதே!

உனக்கிருக்கும் திறமைகளை நீ வெளிச்சம் போட்டுக்காட்டத் தவறாதே!

உன்னை வெறுத்தவரே உன்னை தேடி வரும் நாள் வெகு தொலைவில் இல்லையே!



உனக்கு எதிர் வரும் துயரங்களை எதிர்த்துப் புரட்சிப் பெண்ணாக மாறடி!

பாரதி அன்று கண்ட புதுமைப் பெண்ணாக நீ இன்று வாழ்ந்து காட்டடி!

உன் கலைகளை வெளிப்ப்படுத்தி மேலும் நீ உயரு!

உன் சோகங்களைக் கலைத்து துணிவுடன் நீ நிமிரு!

ஆக்கம் : கேதாரன்

அறிமுகம்



"யாழ் மீடியா" எனும் இந்த வலைப்பூவில் எமது ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நீங்கள் எங்களோடு தொடர்புகொள்ள விரும்பின் இதோ எங்கள் முகவரி : contact@yaamedia.com