lundi 15 juin 2009

நீ இன்று வாழ்ந்து காட்டடி!




பெண்ணே உனக்கு எத்தனைதான் கொடுமைகள் ?

எப்போது தீரும் உன்னை வாட்டும் தனிமைகள்?

பிறந்தவுடன் ஆரம்பிக்கும் துயர் இறக்குமட்டும் தொடர்வதா?

பெண்களுக்கு எத்தனை தான் கொடுமைகள் சொல்வதா?

பாசத்தில், காதலில், வீட்டில், வீதியில், உடலில், உளவியலில்

மண வாழ்க்கையில் ஏன் பிணமாகயில் கூடத் துயரில்...


எனவே, ஒரு நிறைவேறாத காதலால் துவண்டு விடாதே!

உனக்குக் கிடைக்காத பாசத்தால் தளர்ந்து விடாதே!

உன்னை நேசிப்பவரை அதிகமாக நீ நேசிக்கத் தவறாதே!

உனக்கு இசையே துணையென நீ குறிப்பிட்டபோதே- நான்

உணர்ந்து கொண்டேன் உனது துயரங்களின் பாரத்தினை!


துன்பங்கள் தான் நீ முன்னெடுத்திருந்த வாழ்வாக இருந்திருக்கின்றன!

நள்ளிரவில் கூட உன் கண்கள் உன் பேச்சைக் கேட்க்க மறுக்கின்றன!

உன் வாழ்வின் பல மணித்துளிகள் வெறுமையான சிந்தனையில் கழிகின்றன!

அதற்க்காக உன் கவலைகளை இருட்டு அறைக்குள் இருந்தவாறே பூட்டிக்கொள்ளாதே!

உனக்கிருக்கும் திறமைகளை நீ வெளிச்சம் போட்டுக்காட்டத் தவறாதே!

உன்னை வெறுத்தவரே உன்னை தேடி வரும் நாள் வெகு தொலைவில் இல்லையே!



உனக்கு எதிர் வரும் துயரங்களை எதிர்த்துப் புரட்சிப் பெண்ணாக மாறடி!

பாரதி அன்று கண்ட புதுமைப் பெண்ணாக நீ இன்று வாழ்ந்து காட்டடி!

உன் கலைகளை வெளிப்ப்படுத்தி மேலும் நீ உயரு!

உன் சோகங்களைக் கலைத்து துணிவுடன் நீ நிமிரு!

ஆக்கம் : கேதாரன்

Aucun commentaire:

Enregistrer un commentaire