samedi 4 juillet 2009

MY STORY






















பயணங்கள் தொடர்கிறதோ? - உந்தன்
பாதைகள் நீள்கிறதோ?
உன் பழைய வாழ்வு... அதில் நீ
விட்டுச் செல்... ஓர் புதிய சுவடு!!!
பதிந்து இருக்குமே அது…
அப்போதும், இப்பொதும், எப்போதும்...

84 நான் பிறந்தேன் யாழ்ப்பாணத்தில்

கொடிய யுத்தம் நடந்தது தாய் நாட்டில்
இடம் பெயர்ந்து வந்தேன் ரோட்டில்(Road)
பின் கிளாலி கடந்தேன் போட்டில்(Boat)
வந்து வன்னியில் போட்டேன் கொட்டில்.

அங்கு பிடித்தது மலேரியா!
நாட்கள் கடந்தது பட்டினியா!
மீண்டும் யுத்தம் இது சரியா?
தமிழனுக்கென்ன இது விதியா?
நான் சொல்வதென்ன உனக்கு ஜோக்கா?(Joke)
அப்டீன்னு நினைத்தால் நீ மக்கா!

பயணங்கள் தொடர்கிறதோ? - உந்தன்
பாதைகள் நீள்கிறதோ?
உன் பழைய வாழ்வு... அதில் நீ
விட்டுச் செல்... ஓர் புதிய சுவடு!!!
பதிந்து இருக்குமே அது…
அப்போதும், இப்பொதும், எப்போதும்...

மீண்டும் Jaffna பயணம்
அங்கு மக்கள் பலரும் மரணம்
ஆமி (Army) பண்ணுவதெல்லாம் அதர்மம்
அவனை அடித்தொழிப்பதே தர்மம்
பள்ளி செல்வதோ சிரமம்
பார்க்குமிடம் எங்கும் ரத்தம்
இதைக் காணும்போது ஏனோ சீற்றம்
கொதித்தெழுந்தால் என்ன குற்றம்?
இப்படி இருந்தது என் பிழைப்பு !
அப்போ வந்தது ஒர் அழைப்பு,
"வெளிநாடு (பிரான்ஸ்) வா!" என்றதும் திகைப்பு!!!

நான் போனேன் கட்டுநாயக்கா ஏர்போர்ட்! (Air port)
அங்கு இருந்தவன் கேட்டான் என் பாஸ்போர்ட் ! (Passeport)
பின்னர் எங்கே போவதாக உத்தேசம்?
நானோ சொன்னேன் வெளிநாடு தேசம்!
ஏன், நம்ம நாட்டில் என்ன பஞ்சம்?
புரிந்ததெனக்கு, அவன் கேட்பதோ லஞ்சம்!!

ஏறும்போது சொன்னாங்க வெல்கம்! (Welcome)
நானோ தமிழில் கூறினேன் வணக்கம்!
என்றாலும் என் மனதில் ஓர் ஏக்கம்!
அது என் தாய் நாடு தந்த தாக்கம்!

பயணங்கள் தொடர்கிறதோ? - உந்தன்
பாதைகள் நீள்கிறதோ?
உன் பழைய வாழ்வு... அதில் நீ
விட்டுச் செல்... ஓர் புதிய சுவடு!!!
பதிந்து இருக்குமே அது…
அப்போதும், இப்பொதும், எப்போதும்...

ப்லைட் (Flight) வந்து இற்ங்கியது ஆபிரிக்கா!
அப்போ கேட்டேன் " இதுதான் யுரோப்பா ?"
வந்தவன் சொன்னான் " ஆமா, பக்கதில தான்பா!"
உண்மையில் இவன் ஓர் ஏஜென்சி (Agency) தாண்டா!!

ஆபிரிக்காவில் இருந்தேன் ரெண்டு மாசம்,
ஆனால், அது ஓர் வன வாசம்!
ஒரு நாள் சொன்னாங்க "வெளிக்கிடு கானா( Gana)!"
நானோ சொன்னேன் "சரீங்கண்ணா!"
பாஸ்போர்ட் (Passeport) தந்தாங்க "நூல் நூலா" !
இதில போறதுக்கு எனக்கு லூசா! லூசா!
"உனக்கென்ன, நாம் கொடுபோம் கை நிறய பைசா!"
எனக் கூறி ஏற்றிவிட்டான் ப்லைடில் ( Flight) " நைசா "
காசா லேசா காசாலே சா!!! காசா லேசா காசாலே சா!!!

வந்து நான் இறங்கினேன் பாரிஸில்,( Paris)
உடம்பெல்லாம் நடுங்கியது குளிரில்.
இப்படிதாண்டா இங்க வெளிநாட்டில்,
இருக்குமென்று கூறினார் மாமா வீட்டில்.
இது தான் என்னோட ஸ்ரோறி (Story)
உன்னோட லைபும் இதுமாதிரி
இருந்திச்சின்னா, ஐயாம் வெரி சாரி...(I am very Sorry)

பயணங்கள் தொடர்கிறதோ? - உந்தன்
பாதைகள் நீள்கிறதோ?
உன் பழைய வாழ்வு... அதில் நீ
விட்டுச் செல்... ஓர் புதிய சுவடு!!!
பதிந்து இருக்குமே அது…
அப்போதும், இப்பொதும், எப்போதும்...

எழுதியது கேதாரன் ( 2006இல்)

Aucun commentaire:

Enregistrer un commentaire