dimanche 16 août 2009

புதையல் நீ



















ஏதோ சொல்ல நினைத்து தோற்றுப்போய்
உதடுகளில் மறைத்து வைத்திருந்தும்
முடியாமல்...
கோழை ஆகி...
எனக்குள்ளே தவித்த நாட்களை
இன்று நினைக்க...
என்னையே நொந்து சிரிக்கிறேன்!
உண்மையான அர்த்தம் தெரியாமல்
உனக்காய் காத்திருந்து
வெறுமையாய் கழித்த தருணங்களை...
இன்று தேடி அலைகிறேன்
நான் இப்படி என்பதால் நீயும் அப்படியே என்று
கனவில் மட்டுமே வாழ்ந்திருந்தேன்!
ஆனாலும்...
அப்படி இருந்ததினாலோ என்னவோ
என் மீது பல மாற்றங்கள்
ஒரு வார்த்தை கூட பேசவில்லை
தேவையென எதையும் கேட்டதில்லை
இருந்தும்...
எனக்கேயான பாதையை நீ காட்டினாய்
சோகங்கள் வந்த போது
விலக கற்றுத் தந்தாய்
சுகங்கள் வந்த போது
ரசிக்கச் செய்தாய்
உன் நினைவில் வாழ்ந்த
"அந்த வருடங்கள்"
எவருக்கும் தெரியாவிட்டாலும்
எனக்குள் தந்த வருடலை...
இதுவரை சொல்ல நினைத்தும்
முடியவில்லை!
வெளியில் சொல்ல நினைத்தாலும்
வார்தைகள் ஏனோ சரியாய் இல்லை...
போகட்டும்!
நீ இருக்கும் போதே...
எவரிடமும் சொல்ல நினைத்தில்லை
இப்பொழுது மட்டும்!... ஏன்?
என்னுள்ளே மூழ்கிப் போன நினைவாய் நீ!
வெளியில் சொல்லும் போது...
எதையோ இழக்கிறாயே! ஏன்?
அதனால்...
எப்பொழுதும் புதைந்தே இரு!
ஒரு புதையலைப் போல.

-தயா

பாசப் பறவைகள்























பாசப் பறவைகள் இரண்டு
பறந்து வந்ததம்மா!
பணிந்து நானும் ஏற்றுக்கொண்டு
பாசமோடு நின்றேனம்மா!

போதும் போதும் என்று சொல்லி
புனித வாழ்வு வாழ்ந்ததம்மா!
புன்னகை பூத்த வதனங்கள் இரண்டும்
பூப்பூவாய் பொலிந்ததம்மா!

நல் மனதின் கொள்கை கண்டு
நானும் வியந்து நின்றேனம்மா!
நலிந்திடாது ஒன்றை ஒன்று
ஆதரித்து நின்றதம்மா!

கூடும் வாழ்க்கை தன்னிலே
குணங்கெடாது வாழ்ந்திருந்து
கொள்கை கொண்டு கோலாகலமாய்
கூடிய மட்டும் வாழ்ந்தனவே!
-சுஜா