
அம்மா எந்தன் அம்மா
அருமையான அம்மா
இன்பமுற வைத்து
இனிய கதைகள் சொல்வாள்.
ஈன்ற பொழுதில் முகம் மலர்ந்து
ஈகை செய்து வளர்த்தாள்.
உயரிய ஒழுக்கங்களைப் புகட்டி
உரிமையுடன் நேசித்தாள்.
ஊஞ்சலாட விட்டு
ஊக்கமுடன் கவனித்தாள்.
எண்ணும், எழுத்தும் கற்பித்து
எப்பொழுதும் விழித்திருந்தாள்.
ஏற்றம், தாழ்வு பாராது -நல்
எண்ணப்படி வளர்த்தாள்.
ஐம்புலன்கள் உதவியுடன்
ஐங்கரனை வணங்க வைத்தாள்.
ஒற்றுமையாக வாழ்வதற்கு
ஒருங்கிருந்து கற்பித்தாள்.
ஓம் எனும் பிரணவத்தை
ஓதி ஓதிப் புகட்டினாள்.
ஒளதடங்களை ஊட்டி
அன்பாக வளர்த்தாள்.
-சுஜா

Aucun commentaire:
Enregistrer un commentaire